பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
279. இராகம் (தேவசேயின் பால்ய சேனையர்
நாமே) (237)
பல்லவி
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி
ஏசு நாமம் பணிந்து போற்றும்
அனுபல்லவி
தாலந்தை
புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி
வந்த சுவாமி ஏசு அன்பை எண்ணி
சரணங்கள்
1. பாலர்
சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்
பாலர்
நேசர் பதம் பணியக்கற்றோம்
பாரில்
ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்
ஊரில்
எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம்
2. தேடி
வந்தலையும் தேசிகருண்டு
பாடி
ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு
கூடி
வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி
மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு
3. இன்று
மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே
இன்னும்
நித்யமும் பாதுகாப்பாரே
அன்பின்
சங்கம் இதைக் கொண்டு ஆத்ம நேசர் செய்துவரும்
எண்ணிமுடியா
நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு
4. பெற்ற
தாய்மாரே நீர் உற்றுக் கேளீரோ
சற்று
எங்கள் சங்கம் நோக்கிப்பாரீரோ
உங்கள்
மேலுள்ள பொறுப்பைத் தங்கள் மேலே தாங்கி வரும்
எங்கள்
அன்பின் சங்கம் என்றும் ஏகன் அன்பால் செழித்தோங்க
5. குட்டிபேணிடாத
கோனார் தானுண்டோ
நட்டி
வருமென்று நன்குணராரோ
பட்சமுள்ள
மேய்ப்பர்களே இஷ்டரான மெம்பர்களே
ரட்சகரின்
கட்டளையை செய்யும் மேன்மை சங்கத்தை
6. வேண்டும்
நன்மை செய்யும் மேன்மை சங்கத்தை
தூண்டும்
உந்தன் ஜெப தூபமதினால்
மீண்டும்
மிக்க ஆசையுடன் மின்னும் வெள்ளி பொன் எடுத்து
ஆண்டவரின்
பாதம் வந்து அன்பதாய் படைப்பீராக
Comments
Post a Comment