ஆத்தும நேசர் ஆவலாய் ஓடி
280. சங்கராபரணம் ஆதி தாளம் (238)
1. ஆத்தும நேசர்
ஆவலாய் ஓடி
அலைகிறார்
உனைத்தேடி - என் மானே
அண்டைவராயோ தொண்டு செய்யாயோ
அகல நிற்பதேன் மானே
2. தண்ணீர்க்குப்போன சமாரியப்பெண்ணைத்
தவனமுடனே நாடி - என் மானே
சந்தித்தவரிதோ வந்தழைத்தால் வர
தாமதமுனக்கேனோ
3. கள்ளன் கதியடைய உள்ளம் உருகினவர்
காதல் கொள்கிறாருன்மேல் - என் மானே
கலங்கி நில்லாதே, புலம்பி வாடாதே
காலமே வரலாதோ
4. சின்னக்கடலில் வலைவீசி மீன்பிடித்த
செம்படவரைத் தேடி - என் மானே
சீஷர்களாக்கி ஆதரித்தவர் பின்னே
சொல்லொண்ணாதோ மானே
5. வெட்ட வெளியில் நின்ற நெட்டை மரத்திலொரு
குட்டயன் முகம் பார்க்க - என் மானே
திட்டமாய் பன்னிரு சீடர்கள் சூழ
திரள் கும்பொடு சென்ற
6. கல்லறை பார்த்து வந்து கதறி அழுத மரி
கவலையகற்றவென்ற - என் மானே
கண்ணிமைப்பொழுதே கண்டு துயர் தவிர்த்த
கருணாகரனென்றும்
7. மானே உன்னை நான் மறந்திருப்பேனோ
மயங்காதே சொன்னேன் - என் மானே
மாடம் புறாவே மாதுளங்கனியே
வந்திடுவாய் துரிதம்
Comments
Post a Comment