சாவெனக்காதாயம்
278. இராகம் இங்கிலீஷ் (236)
1. சாவெனக்காதாயம்
ஜல்தி விளைக்கும்
சுவாமி
ஏசு ஜீவன் தாசனெனக்கே
பூவெனக்குச் சத்ரம்போன்ற வீடாமே
போவேன் பொன்னகர் நோக்கி
பல்லவி
போவேன் வாழ்வேனே பொன்னகரில்
சாவாம் யோர்தானைத் தாண்டி
வாழ்வே
சாவெனக்காதயம் ஜல்தி விளைக்கும்
சுவாமி ஏசு நாதரால்
2. தொல்லை மிகு லோக துயர் முடியும்
வல்லவரின் கை என் வாட்டம் தீர்த்திடும்
தொல்லைமிகும் சாத்தான் தொடர்ந்து வரான்
எல்லை கடரான நாடே
3. மீட்ட நாதரின் பொன்மேனியைக் காண்பேன்
ஆட்டுக்குட்டியின் வெண் ஆசனம் காண்பேன்
கூட்ட தூதரோடு கூடிப் போற்றுவேன்
குரல் கம்மாதென்றுமே
4. என் முன்னதாய் சென்ற இஷ்டர் உற்றாரை
மன்னன் வீடாம் மோட்ச வாசலில் காண்பேன்
சொர் வாசல் கோட்டை ஜோதியிற் காண்பேன்
சொந்தமாம் சுரர் நாடே
5. பாழ்புரியிலெங்கும் பயம் தங்கிடும்
பகைஞன் தான் வீழப் பண்ணுவானென்றோ
வீழ்வதில்லை சாவு வெற்றிமுடியும்
மேல் வீட்டில் இனி வாழ்வேன்
6. வானத்தின் கீழ்வாழ்வு மாய்கையானதே
மானிடரின் கண்ணீர் வருத்தும் மெய்யே
வானவரின் நாட்டின் வாழ்வு சதமே
மரணமதின் வாசலே
7. வெண்ணங்கி தரித்து மேல் வீட்டில் வாழ்வேன்
வெற்றி பெற்றோர்க்குள் என்வீதம் பெறுவேன்
கண்ணீர் துடைப்பார் தம் கரத்தாலேசு
கவலை தீர என்றும்
8. ஓட்ட முடிவாகும் உறக்கமாகும்
சூட்டக்கிரீடம் என் சொந்தமாகிடும்
நாட்டமாய் மீட்பர் நேர் நடத்தினோரை
நான் கண்டு மகிழுவேன்
9. தேகம் விட்ட என்னை செங்கரத்தேந்தி
வேகமாக தூதர் மேல் வீடேகுவார்
ஏக க்ஷணப்பொழுதில் இயேசு மடியில்
என்னைக் கொண்டு சேர்ப்பார் ஆமென்
Comments
Post a Comment