ஐயா கொல்கொதா மலை


277. இராகம் (ஐயா கிறிஸ்து மகராஜா)

பல்லவி

                                    ஐயா கொல்கொதா மலை நாதா
                                    எனக்கார் துணை சொல்லனுகூலா       

அனுபல்லவி

                        மெய்யா இதுதருணம் வா வா
                        இச்சிறியோன் முகத்தைப் பார்க்க வா வா

1.         பாறைக்குள் தேரை போலானேன் நான்
            பல துயர் பட்டவனானேன்
            ஆலைக்குள் கரும்பு போலானேன் இந்த
            அகதிக்குன் முகம் காட்ட வாரும்

2.         பலரும் பலதுசொல்லி ஏய்த்து எனை
            அலைவாய் துரும்புபோல் ஆய்ந்து
            தொலையாத கவலைக்குள் மாய்த்து எனைத்
            துரத்திவிட்ட கதியைப் பார்த்து

3.         பெற்றோர் எனைக்கைவிட்டபோதும் என்
            பிறவிகள் மறந்திட்டபோதும்
            மற்றோர்கள் இரங்காதபோதும் என்னை
            மறவா என் நேசா நீர் பாரும்

4.         தாகம் மிகுந்தவரே வாரும் நல்
            அமர்ந்த தண்ணீரண்டை சேரும்
            பணமும் விலையுமில்லாமல் நான்
            பருகிடத் தாகத்தைத் தீரும்

5.         தூங்கா இஸ்ரவேலின் தேவா ஏழை
            துயர் நீக்கும் மகிமை ஏகோவா
            மங்காத வாக்குரைத்த தேவா உனை
            மறக்கவே மாட்டேன் என் தேவா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு