உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
பல்லவி
உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன்
எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
சரணங்கள்
1. கல்லறை
திறந்திடவே
கடும்
சேவகர் பயந்திடவே
வல்லவர்
இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல
பிதாவின் செயலிதுவே - உயிர்
2. மரித்தவர்
மத்தியிலே
ஜீவ
தேவனைத் தேடுவாரோ?
நீதியின்
அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய
நம்பிக்கை பெருகிடுதே - உயிர்
3. எம்மா
ஊர் சீஷர்களின்
எல்லா
மன இருள் நீக்கினாரே
எம்மனக்
கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப்
பரமானந்தமே - உயிர்
4. மரணமுன்
கூர் எங்கே?
பாதாள
முன் ஜெய மெங்கே?
சாவையும்
நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே
துதி சாற்றிடுவோம் - உயிர்
5. ஆவியால்
இன்றும் என்றும்
ஆ
எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின்
அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா
துதி சாற்றிடுவோம் - உயிர்
6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும்
காத்துக்கொள்வோம்
எக்காளம்
தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே
மகிமையிலே - உயிர்
Comments
Post a Comment