26 June 2018

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை


                    கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
            கண்கள் கலங்கிடுதே
            கர்த்தா உம் பாடுகள் நித்தமும் நினைத்தால்
            நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1.         கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை
            எத்திசை அந்தோ தொனிக்கின்றதே
            எந்தன் மனம் திகைக்கின்றதே
            கண்கள் கலங்கிடுதே                            - கல்வாரி

2.         சிலுவையில் அறைந்து வதைத்தனரோ (செந்நிறமாக்கினரோ
            அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
            அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
            அப்பா உம் அன்பு பெரிதே                    - கல்வாரி

3.         என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
            என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
            தந்து விட்டோம் அன்புக் கரங்களிலே
            ஏற்று என்றும் நடத்தும்              - கல்வாரி

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...