விந்தை கிறிஸ்தேசு ராசா


பல்லவி

                    விந்தை கிறிஸ்தேசு ராசா!
                        உந்தஞ் சிலுவை என் மேன்மை

அனுபல்லவி

            சுந்தர மிகும் இந்த பூவில்
            எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்     - விந்தை

சரணங்கள்

1.         திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
            செல்வாக்குகள் மிக விருப்பினும்
            குருசை நோக்கி பார்க்க எனக்கு
            உரிய பெருமைகள் யாவும் அற்பமே.      - விந்தை

2.         உம் குருசே ஆசிக்கெல்லாம்
            ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
            துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
            தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை

3.         சென்னி, விலா, கை, கானின்று
            சிந்துதோ! துயரோடன்பு;
            மன்னா, இதைப் போன்ற காட்சி
            எந்நாளிலுமே எங்கும் காணேன்            - விந்தை

4.         இந்த விந்தை அன்புக் கீடாய்
            என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
            எந்த அரும் பொருள் ஈடாகும்?
            என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு