உருகாயோ நெஞ்சமே


பல்லவி

                    உருகாயோ நெஞ்சமே
                        குருசினில் அந்தோபார்
                        கரங்கால்கள் ஆணியேறித்
                        திருமேனி நையுதே

சரணங்கள்

1.         திண்டு போல எண்டிசையின்
            தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
            நின்றதே ஓர் பண்டு ஏவை
            தின்ற சாபம் மண்டுதே              - உருகாயோ

2.         தாகம் மிஞ்சி நாவறண்டு
            தங்க மேனி மங்குதே
            ஏகபரன் கண்ணயர்ந்து
            எத்தனையாய் ஏங்குறார்!           - உருகாயோ

3.         வல்ல பேயை வெல்ல வானம்
            விட்டு வந்த தெய்வம் பாராய்!
            புல்லரிதோ நன்றி கெட்டு
            புறம்பாக்கினாரன்றோ?              - உருகாயோ

4.         மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
            மாய்க்க வந்த மன்னவனார்
            இந்நில மெல்லாம் புரக்க
            ஈனக்குரு சேறினார்!                  - உருகாயோ

5.         மூவுலகும் தாங்கும் தேவன்
            மூன்று ஆணி தாங்கிடவோ
            சாகும் வேளை வந்த போது
            சிலுவையில் தொங்கினார்.       - உருகாயோ

6.         நித்திய காலம் பாத்திரராய்
            நீசர் வாசஸ்தலம் உய்ய
            சத்திய தாசர் சித்தமேவும்
            சங்கை ராஜன் இங்கு பார்!        - உருகாயோ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு