26 June 2018

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

கன்:90

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

 

                             பல்லவி

 

                   ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

                        ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

 

                             சரணங்கள்

 

1.         பார்! திருமேனி வாரடியேற்றவர்

            பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே

            பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்

            பயமின்றி வந்திடுவாய் - ஆணி

 

2.         மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்

            நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே

            உணர்ந்திதையுடனே உன்னதனண்டை

            சரண்புகுவாய் இத்தருணம் - ஆணி

 

3.         கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே

            மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே

            உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர

            கிருபையும் அளித்திடுவார் - ஆணி

 

4.         பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்

            பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே

            மறுரூப நாளின் அச்சாரமதுவே

            மகிமையும் அடைந்திடுவாய் - ஆணி

 

5.         இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்

            இரட்சகர் வேறு இகமதிலுண்டோ

            அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே

            அவரே உன் நாயகரே - ஆணி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...