உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே


பல்லவி

                   உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
                        உம் இரத்தமே என் பானமே

சரணங்கள்

1.         பாய்ந்து வந்த நின் ரத்தமே
            சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
            பாவிகள் நேசர் பாவி என்னை
            கூவி கழுவினீர் என்னை          - உம் இரத்தமே

2.         நீ நேசச் சிலுவை சத்தியம்
            நாசமடைவோர்க்குப் பைத்தியம்
            இரட்சிப்படைவோர் சத்தியம்
            நிச்சயம் காப்பார் நித்தியம்        - உம் இரத்தமே

3.         நின் சிலுவையில் சிந்தின
            வன்மையுள்ள இரத்தத்தினால்
            என் பாவத்தைப் பரிகரித்தீர்
            அன்புள்ள தேவபுத்திரா            - உம் இரத்தமே

4.         பன்றிபோல் சேறில் புரண்டேன்
            நன்றியில்லாமலே திரிந்தேன்
            கரத்தால் அரவணைத்தீர்
            வரத்தால் ஆசீர்வதித்தீர்         - உம் இரத்தமே

5.         விழுங்கப் பார்க்கும் சாத்தானை
            மழுங்க வைத்தீர் அவனை
            புழுங்காமல் போக்கினானே
            களங்கமில்லாக் கர்த்தரே          - உம் இரத்தமே

6.         ஐயனே உமக்கு மகிமையும்
            துய்யனே துதி கனமும்
            மெய்யனே எல்லா வல்லமையும்
            உய்யோனே உமக்கல்லேலூயா   - உம் இரத்தமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு