26 June 2018

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

கன்:82

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             பல்லவி

 

                   அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

                        சிறுமை அடைந்தே தொங்குறார்

 

                             சரணங்கள்

 

1.         மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்

            கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே

            மாயலோகத்தோடழியாது யான்

            தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே - அந்தோ

 

2.         அழகுமில்லை சௌந்தரியமில்லை

            அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க

            பல நிந்தைகள் சுமந்தாலுமே

            பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ

 

3.         முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்

            கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்

            குருதி வடிந்தவர் தொங்கினார்

            வருந்தி மடிவோரை மீட்டிடவே - அந்தோ

 

4.         அதிசயம் இது இயேசுவின் தியாகம்

            அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்

            அதை எண்ணியே நிதம் வாழுவேன்

            அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே - அந்தோ

 

5.         சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி

            சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே

            என்னைச் சேர்த்திட வருவேனென்றார்

            என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் - அந்தோ

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...