பாரீர் கெத்சமனே


பல்லவி

                   பாரீர் கெத்சமனே
                        பூங்காவில் என் நேசரையே
                        பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
                        சத்தம் தொனித்திடுதே

சரணங்கள்

1.         தேகமெல்லாம் வருந்தி
            சோகமடைந்தவராய்
            தேவாதி தேவன் ஏகசுதன்
            படும் பாடு எனக்காகவே                        - பாரீர்

2.         அப்பா என் பாத்திரமே
            நீக்கும் நின் சித்தமானால்
            எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
            தத்தம் செய்வேன் என்றாரே                   - பாரீர்

3.         ரத்தத்தின் வேர்வையாலே
            மெத்தவும் நனைந்ததே
            இம்மானுவேல் உள்ளம் உருகியே
            வேண்டுதல் செய்தாரே                          - பாரீர்

4.         மும்முறை தரைமீது
            தாங்கொணா வேதனையால்
            உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
            பாதகன் மீட்புறவே                                - பாரீர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு