பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே - உன்


179. இராகம்      (போற்ற வாரும் பெத்லேம் நகர்)                 (135)

பல்லவி

                        பாருமுந்தன் கிருபைக் கண்ணாலே - உன்
                        பக்தரிருவரை பாலிய தோழரை

அனுபல்லவி

            சேரும் நின்னருள் பெற்று சுகித்திட, ஜெகத்தினில்
            உம்மையே போற்றித் துதித்திட

1.         ஆபிராம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே
            அன்று ஏதேனில் இணைத்த இறைவனே
            இன்று தாசரிருவர் இந்நிலைக் குட்பட
            ஏசுவே உம்மையே ஏற்றித் துதித்திட                            - பாருமுந்தன்

2.         ஆரஞ்சு புஷ்பத்தின் மணமோ அல்லதிது
            அழகான மல்லிகைப் பூவின் மணமோ இவர்
            சூடியிருக்கும் இந்த பிச்சியின் மணமோ
            ஜொலிக்குது ..................... அம்மாள் ஜோதிப்பட்டாடையே            - பாருமுந்தன்

3.         பச்சை நவரத்ன முத்து இலங்கிடும்
            பாலிய அழகிய ....................... அம்மாளும்
            மெல்லநடையதை சிங்காரமாக்கிட
            சேர்ந்து தம்பதிகளை ஆசீர்வதித்திட                                     - பாருமுந்தன்

4.         கோத்திரத்திலிவர் எப்ராயீம் போலவும்
            வாய்திறத்தில் ஆரோன் ஆரியர் போலவும்
            நீதி நெறி தவறாது நடக்கவும்
            நித்திய பாக்கியம் என்றும் கிடைக்கவும்                                    - பாருமுந்தன்

5.         சொல்லின் கற்புள்ள ................. அவர்களும்
            ஜேசருளால் நல்ல புத்திர பாக்கியம்
            பெற்று மகிழ்ந்திட உற்று வளர்ந்திட
            இத்தருணம் வரவேண்டி மன்றாடுகிறோம்                                 - பாருமுந்தன்

6.         மணவாளன் ................... அவர்களும்
            மணவாட்டி ................... அம்மாளும்
            இவர்களிருவரும் இணை பிரியாப்படி
            என்றும் கனிந்து மகிழ்ந்து சுகிக்கவும்                                        - பாருமுந்தன்

7.         சந்ததம் சந்ததம் அம்மா்ன ஏசுநாதர்க்கே
            மங்களம் பாடகர் மற்றும் சபையோர்க்கே
            தாசன் ...... ஐயர்க்காவி உண்டாகவே
            தாசரிருவர்க்கும் ஆவி உண்டாகவும்                                       - பாருமுந்தன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு