01 June 2018

பூச்சொரிவோம் புண்ணியரே மாப்பிள்ளை பெண்மேல்


178. இராகம்      (பாவிகளை மீட்க வந்த)               

பல்லவி

          பூச்சொரிவோம் புண்ணியரே மாப்பிள்ளை பெண்மேல்

அனுபல்லவி

                        பூமகளாம் ................... மகிழ்ந்து வாழவே

1.         காலா காலமாயிவர்க்கு கருணை செய்யவே
            ஞாலமதில் வாழ்ந்திருக்க ஞானம் தரவுமே
           
2.         கானாவூர் கல்யாணமதில் கனிரசம் தந்த
            வான் ஆகாரம் தந்துமே வரம் தரவுமே

3.         வரம் மிகுந்த ........... மங்கை .............................
            இங்கு வந்த நம்முடைய நண்பர் மகிழ

4.         இத்தரையில் பக்தியாய் நித்தமும் வாழ
            உத்தமனே உம்மை உறுதியாய் சொல்லவே

5.         இந்த மணப் பந்தலிலே ஏகன் வரவே
            இங்கு உள்ளோர் என்றும் அவரைப் போற்றவே

6.         இந்த மங்களஞ் செழிக்க ஏசையாவே
            இங்கு கூடிப் பாட்டுப்பாடும் பாடகர் வாழவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...