மங்களமே மங்களமே மங்களமே மங்களமே
180. செஞ்சுருட்டி ஆதி
தாளம் (136)
பல்லவி
மங்களமே
மங்களமே மங்களமே மங்களமே
மங்களமே
மங்களமே சுபஜெய மங்கள மங்களமே
1. சீர்வளர் தயாபரவரனேவர ஏர்வளர் பரமசுத்தாவியே
வா
ஓர்முகம் காட்டிட பாட்டொலி கேட்டிட
நன்முடி சூட்டி நல்வரம் காட்டிவா - மங்களமே
2. அன்று கானாவில் சென்றது வண்ணமே
இந்தநாள் மணம் செய்யுமிவர்க்கருள்
வாழ்த்தித் துதித்திட ஏற்றிப்புகழ்ந்திட
போற்றி மகிழ்ந்திட சோபனம் செழித்திட - மங்களமே
3. எள்ளினுள் எண்ணெய் இசையும் வண்ணம்
மன்னன் ...... மங்கை .....
பண்பதாய் கூடி அன்பினில் நாடி
உன் தயை தேடி இன்பமாய் வாழ்ந்திட - மங்களமே
4. உற்றோர் பெற்றோர் மணமக்கள் வாழ்ந்திட
சுற்றோர் மற்றோர் யாவரும் ஓங்கிட
வற்றா உனினருள் பெற்றுத் திருவடி
கற்றுத்திருமொழி களிக்கச் செழித்திட - மங்களமே
Comments
Post a Comment