06 June 2018

எனதுள்ளமே உகந்த வரைத்தேடு

எனதுள்ளமே உகந்த வரைத்தேடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

237.

 

                             பல்லவி

 

                   எனதுள்ளமே உகந்த வரைத்தேடு

                   உதவி பெற நாடு உண்மையுடன்

                        மன்றாடு எனதுள்ளமே

 

1.         வள்ளல் தாவீதின் குலத்தில் மாதிடமுதித்தவரிவர் எனதுள்ளமே

            உள்ளவினை தீர்க்கவந்தவர், இவர் - எனதுள்ளமே

 

2.         வானம் புவி யாவையும் வாரியும் வல்லுயிர்களையும்

            ஞானமாய் படைத்தளித்தவர், இவர் - எனதுள்ளமே

 

3.         கோத்திரப் பிதாக்கள் தொழும் கோதில்லா நாதனார்

            சாஸ்திர முழுதும் சார்ந்தவர், இவர் - எனதுள்ளமே

 

4.         வெல்லைமலை தன்னிலே புல்லணையில் மீதிலே

            வேதபரனாக வந்தவர், இவர் - எனதுள்ளமே

 

5.         சொந்தக்கலிலேயாவில் விந்தையுடனந்த மணப்

            பந்தலில் ரசம் பொழிந்தவர் இவர் - எனதுள்ளமே

 

6.         ஐந்தப்பம் இருமீன் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கு

            பந்தி போஜனம் அளித்தவர், இவர் - எனதுள்ளமே

 

7.         காக்கையைக்கொண்டு மெளிய கைம்பெண்ணைக் கொண்டு மெலியா

            ஏக்கமறப் பசி தீர்த்தவர், இவர் - எனதுள்ளமே

 

8.         தக்க சிங்கப்பற்களுள்ள தானியேலை அன்புடனே

            தற்காத்து ரட்சை செய்தவர், இவர் - எனதுள்ளமே

 

9.         ஏராளமான பாவங்கள் தாராளமாய் நீங்குதற்கு

            ஏரோது முன்சென்று வந்தவர், இவர் - எனதுள்ளமே

 

10.       சாபத்தால் நிறைந்த உந்தன் பாவத்தை அகற்றுதற்கு

            தாகந்தணிந்திரந்தவர், இவர் - எனதுள்ளமே

 

11.       தேவகோபத்தீயினில் வெந்துருகும் போதினில்

            ஆவி ஊற்றி ஆதரித்தவர், இவர் - எனதுள்ளமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...