தேவ கிருபை ஆசீர்வாதம்


236. செஞ்சுருட்டி       ஆதி தாளம் (182)

பல்லவி

 

                   தேவ கிருபை ஆசீர்வாதம் தினமும் எங்களில் பெருகிட


1.         ஆவலாயும தோய்வு நாளில் ஆலயந்தனில் பணிந்து புகழ
            பாவ அறிக்கை செய்யும் சபையார் பரனின் கிருபை பெற்று மகிழ                        

2.         ஆவலா யெங்கள் ஆண் குழந்தைகள் அழகான இளமரங்கள் போலவும்
            பாவையர்களாம் பெண் குழந்தைகள் பலத்த சித்திர அரண்கள் போலவும்         

3.         ஆலயந்தனிலுமது வசனம் அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
            வேலை ஓய்ந்து பணியும் சபையார் விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும்           

4.         எங்கள் பண்டகசாலை சகல இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
            எங்கள் ஆடுகள் கிராமங்களிலே லட்சம் கோடியாய்ப் பெருகிப்போகவும்

5.         எங்கள் மாடுகள் பலத்திருக்கவும் இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
            பங்கவலசை பணியும் கூக்குரல் பதிவில் தெரிவில்லாதிருக்கவும்

6.         இத்தன்மையுடனிருக்கும் ஜனங்கள் இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
            கர்த்தர் தெய்வமென்றிருக்கும் பாக்கியம் கண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும்           

7.         இந்த வீட்டுக்குச் சமாதானம் நல் இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
            சந்ததியாய் நீடூழி உம்மையும் சபை அனைவரும் துதித்திப்பாடிட

8.         உன்னதங்களிலிருக்கும் தெய்வத்தின் உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
            இந்நிலம் சமாதானம் பெற்றிட இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும்

9.         இந்த நற்சபை கூட்டத்தின் ஜனங்கள் நாளடைவிலே பெருகி வரவும்
            இந்த நற்சபைக்கூட்டத்தின் மத்தியில் இருந்துவாரும் எங்கள் ஏசுவே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு