இம்மானுவேலின் இரத்தத்தால்


            1.       இம்மானுவேலின் இரத்தத்தால்
                        நிறைந்த ஊற்றுண்டே
                        எப்பாவத் தீங்கும் அதனால்
                        நிவிர்த்தியாகுமே

பல்லவி

                                    நான் நம்புவேன்! நான் நம்புவேன்!
                                    இயேசு எனக்காய் மரித்தார் - மரித்தார்
                                    பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்

            2.         மா பாவியான கள்ளனும்
                        அவ்வூற்றில் மூழ்கினான்
                        மன்னிப்பும் மோட்சானந்தமும்
                        அடைந்து பூரித்தான்               - நான்

            3.         அவ்வாறு நானும் யேசுவால்
                        விமோசனம் பெற்றேன்
                        என் பாவம் நீங்கிப் போனதால்
                        ஓயாமல் பாடுவேன்.                    - நான்

            4.         காயத்தில் ஓடும் ரத்தத்தை
                        விஸ்வாசத்தால் கண்டேன்
                        ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
                        எங்கும் பிரஸ்தாபிப்பேன்          - நான்

            5.         விண்ணில் வல்ல நாதரை
                        நான் கண்டு பூரிப்பேன்
                        அங்கென்னை மீட்ட நேசத்தைக்
                        கொண்டாடிப் போற்றுவேன்       - நான்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு