இயேசு எனக்காக சிலுவையில் மாண்டீரே!


பல்லவி

          இயேசு எனக்காக சிலுவையில் மாண்டீரே!

சரணங்கள்

1.         பாவி எனக்காக தேவே நீர்
            ஆவியை விட்டீரோ!
            கோரமாய்க் குருதி வடித்தீரோ - இயேசு
            பாரத்தால் துவண்டு துடித்தீரோ!                       - இயேசு

2.         நீச பாவச் செயல்களில்
            ஈசனே உழன்றேனே!
            பாவப் பாரத்தால் நான் சோர்வுற்றேன்
            சிலுவையண்டை தாழ்ந்து வாரேன் நான்          - இயேசு

3.         தலை கைகள் கால்கள் விலா
            நிலையில்லா வெள்ளமாய்
            செந்நீர் வடிப்பதென் பாவமே - இவ்
            வன்பிற்குப் பாத்திரன் அல்ல நான்                    - இயேசு

4.         ஐயோ பாவி என்னை தேவா
            உய்விக்க வந்தீரோ!
            பாபமே ஆனீரோ பாவிக்காய் - இயேசு
            சாபமே ஏற்றீரோ என்னால் நீர்                            - இயேசு

5.         என் தேவனே தேவனே
            ஏனென்னைக் கைவிட்டீர்
            என் கைப்பற்றவல்லோ கைவிட்டீர் - இயேசு
            கண்ணீரிவ்வன்பிற் கீடாகுமோ                         - இயேசு

6.         இந்தக் கோரக் காட்சி காணத்
            தந்தை சகியாமல்
            மைந்தனை விட்டு நீர் திரும்பி - தேவா
            இந்தப் பாவியைக் கண்ணோக்கினீர்                 - இயேசு

7.         ஐயோ என் செய்வேன் பாவி நான்
            உள்ளம் உடைவேனோ?
            கண்ணீர் சொரிவேனோ என் இயேசுவே - ஐந்து
            காயங்கள் கழுவக் கரைந்து                              - இயேசு

Comments

  1. Thank you so much. It was one of my father’s favorite song.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! நன்றி!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு