1. காலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள்
பாக்கிய நாள் - மகிமையில்
2. கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட - மகிமையில்
3. துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னலெல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால் - மகிமையில்
4. வாழ்க்கையை இயேசுவால்
நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க
காத்துக்கொள் விசுவாசத்தை - மகிமையில்
5. உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமேன்
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள்
மாறிப்போம் - மகிமையில்
YouTube Link
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment