நாதனேசையனை வாழ்த்துவோம்
200. இராகம் (பருந்து நீண்ட பாம்பொன்று) (291)
பல்லவி
நாதனேசையனை
வாழ்த்துவோம்
நல
வருடமும் தோன்றிற்றே
அனுபல்லவி
சென்ற
நாட்களெல்லாம் செம்மையும் நன்மையும்
என்றும் நம் ஜீவியம் தன்னில் தொடர்ந்ததே
1. புதிய ஆண்டினில் புதிய நல்
ஜீவியம் செய்திட ஏசுவே
கிருபை நதியை கடாட்சம் செய்திட
அருள் ஆவி ஊற்றும் ஆசீர்வதித்திடும்
2. தோத்திரம் தோத்திரம் தோத்திரம்
துய்ய சிம்மாசன ராஜனே
துதியும் கனமும் தேசங்கள் யாவிலும்
தோன்றுமுமக்கே தேவாதி தேவனே
3. அருள் பொழியவும் அஞ்ஞான இருள்
ஒழியவுமெஞ்ஞான வொளி
சுடர்ச்சி நம்முடன் ஜோதிப்பிரகாசமாய்
தாசர்மேல் நேசமாய் வீசவும் வேண்டுவோம்
4. ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தி
ஐந்தாம் ஆண்டையும் காணவே
அனுக்கிரகித்த நம் அன்புள்ள கர்த்தனை
ஆவலுடனே ஏகமாய்த் துதித்து
5. இத்தனை நாட்களாய் கர்த்தனார்
ஈந்தனர் வேண்டிய சகலமும்
இன்னொரு ஆண்டையும் இன்பமாய்க் காணவே
இரக்கம் வைத்த நம் ரட்சண்ய பெருமான்
Comments
Post a Comment