ஆனந்தம் ஆனந்தமே மகானந்தம் ஆனந்தமே


199. பியாகு          ஆதி தாளம் (149)

பல்லவி

                   ஆனந்தம் ஆனந்தமே மகானந்தம் ஆனந்தமே
                   பேரானந்தம் ஆனந்தமே மோட்சானந்தமே

அனுபல்லவி

                   மணியாரமலன் நனியாரருளால்
                        இனிதாய் மனமகிழ் தினமிதிலே

1.         அனுதின ஆகாரமும் எனக்கினிய நற்சீருடையும்
            திறமான நல்லுடல் சுகமும் எனக்கென்றும் நீர் அருளினதால் - மணியா

2.         நித்திய ஜீவனுடன் ஓர் முத்தொழி ராஜ்ஜியமும்
            மாகர்த்தன் கருணையினால் தர சத்யவாக்கருளினதால்            - மணியா

3.         காசினி மீதினிலே எம்மாயுசு காலமெல்லாம்
            வெம் தோஷி மாபாவி எனக்கும்வாசிடையருளியதால்               - மணியா

4.         சீருடனுலகில் நாங்கள் - என்றும்
            பேருடன் வாழச் செய்யும் - எங்கள்
            அருமையாம் ஆண்டவராம் - உந்தன்
            காரூண்யத்துடன் வாழ்ந்திட                - மணியா

5.         அற்புத சுதந்தரமே - உந்தன்
            அற்புத போதனைகள் - உயர்
            விண்டலமீதிருந்தும் - நீர்
            எண்டிசையாளுவீரே                             - மணியா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு