என் அப்பா தாய் மேய்ப்பர் அன்பர் குரு தெய்வம் நீயே


198. இராகம் (இங்கிலீஷ்)                                                                           

பல்லவி

                   என் அப்பா தாய் மேய்ப்பர் அன்பர் குரு தெய்வம் நீயே

1.         கண்விழி போலென்னைத் காத்தோனும் நீயே
            கடந்த காலமெந்தன் காவலும் நீயே
            கருணைக் கடலே கடலே கடலே
            மண் எனைக்கையில் வரைந்தோனும் நீயே
            மட்டில்லாப் புகழ் உமக்கே                    - என்

2.         விண் இறை நீயே வேந்தனும்நீயே
            மேதினி யாவுக்கும் மேல்ராஜன் நீயே
            விண்ணோர் வீழ்ந்து போற்றும் நாதா
            மண்னுலகோரும் வான்ஜோதி கடரும்
            வகுத்தவா வான் நாடா                         - என்

3.         தூதர்கள் போற்றும் சுயா திபன் நீயே
            ஆதங்கம் நீக்கினோன் அருள் ஊற்றும் நீயே
            வேதம் நிறைவான கோனா
            கோதலின்றியே குறைவில்லா ஒன்றே
            குறைவில்லா நீதி நிறைவே                 - என்

4.         அன்பர்க்கு கிருபை அளிப்பவர் நீயே
            அருணோதய ஒளி ஆனோனும் நீயே
            அன்பர்க்கன்பர் நண்பர் நண்பா
            என்பரன் நீயே ஏகோவாவும் நீயே
            ஏழை அடியேன் எனக்கே                      - என்

5.         அல்பா ஒமெகா ஆதி அந்தம் நீயே
            அதிசய மீட்பரை அனுப்பினேன் நீயே
            அருமை வேதம் அருள் செய்தோனே
            அருமைப்பிதாவே அடைக்கலம் நீயே
            ஆதரவற்றோர்க்கு                                - என்

6.         துயர்காலம் என்பக்கத் துணையாவோன் நீயே
            துவண்டு விழுகையில் தூக்குவோன் நீயே
            தூயா ஓயா சேயா நேயா
            துன்பத்திலின்பம் துயர்காலத் தன்பா
            சுத்தக் கண்ணாளா தயாளா                  - என்  

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு