துதிப்பேன் துதிப்பேன் ஏசுதேவனே அல்லேலூயா பாடி


208.                         (151)

பல்லவி

                   துதிப்பேன் துதிப்பேன் ஏசுதேவனே அல்லேலூயா பாடி
                   துதிப்பேன் துதிப்பேன் ஏசுதேவனே

அனுபல்லவி

                        துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
                        தூயவனாய் வந்த தேவகுமாரனை                     - துதிப்பேன்

1.         கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர் தம் ஜனத்தின் கூக்குரல்
            கருணைகூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
            லோகப்பாவச்சுமைதனை சிரசுகொண்டு சுமந்தளிக்க வென்றே
            குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை                  - துதிப்பேன்

2.         பொற்குத்து விளக்கு ஏழு மத்தியிலே எங்கள் ஏசுநாயகர்
            பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
            நிலை அங்கி தரித்தோராய் கற்பிக்கும் காரியம் கவனமாய்க் கேட்டு
            சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை                  - துதிப்பேன்

3.         வழியும் சத்தியமும் ஜீவனுமவரே அவரருகில் வருவீர்
            வழியில் ஆறுதல் செய்பவரவரே
            லோகபாவத்தைச் சுமந்தார் பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
            அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை               - துதிப்பேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு