ஏசுவைப் பார்த்து நட என் நேசா
207. சுருட்டி ஆதி தாளம் (150)
பல்லவி
ஏசுவைப்
பார்த்து நட என் நேசா
1. நமது பாவங்களுக்காக மரித்து - நாம்
நடந்திட வழிகாட்டி முன்சென்ற - ஏசுவை
2. தீமைக்குத் தீமை செய்தாரோ? - தமைச்
சிலுவையிலறைந்தோர்க்காய் ஜெபித்தாரே - ஏசுவை
3. சண்டை கூக்குரல் செய்யாரே - தம்
சத்தத்தை வீதியில் காட்டாரே - ஏசுவை
4. நெரிந்த நாணலை முறியாரே - மங்கி
எரிந்த திரியை அவியாரே - ஏசுவை
5. உருக்க விரக்கங்களுள்ளாரே - அவர்
செவிடூமை குருடர்களை தள்ளாரே - ஏசுவை
6. நன்மை செய்வதில் ஓய்ந்ததுமில்லை
நாட்களை வீணிலே கழித்ததுமில்லை - ஏசுவை
Comments
Post a Comment