பிரதிஷ்டை செய்ய வாரும், பெரியோனே இந்த வீட்டை
206. இராகம் (உனக்கொத்தாசை வரும் நல்) (263)
பிரதிஷ்டை
செய்ய வாரும், பெரியோனே இந்த வீட்டை
அனுபல்லவி
நரரான
நாங்கள் தினம் துதி பாடி ஜெபித்திட
1. நாச உலகமதில் வாசம் செய்கிறபோது
நேசா நீர் கிருபையா யீந்தீரே இவ்விடத்தை
2. கர்த்தர் வீடுகட்டாராகில் கட்டுவர் பிரயாசம்
வீண்
மெத்தநேரம் வேலைசெய்து போஜனம் புசிப்பதும்
வீண்
3. தமக்குப்பிரியமான தாசர்க்குச் சுகமுள்ள
நித்திரையும் கொடுத்து நிதமும் ஆசீர்வதிப்பார்
4. இந்த மனையில் வாசம் செய்யும் பிள்ளைகள் மேலே
சந்ததமும் கிருபை கூர்ந்திடும் அன்பினாலே
5. அக்கினி புசல் காற்று ஆபத்துத் துன்பம் தொல்லை
சீக்கு மரணம் மோசம் செய்யாமல் காருமையா
6. தங்கி ஜெபிக்கும் ஜனம் சத்திய ஆவியினால்
பொங்கிப்பூரித்து புதுப்பிறவியாய் மாறச்செய்யும்
7. தண்ணீரை சுத்தம்செய்து தாராளமாய் பெருக்கி
புண்ணியரே நீரெல்லாம் பொற்கரம் வைத்துத்தொடும்
8. மன்றாட்டுக்கெல்லாமுடன் மறுமொழி அருளியே
ஒன்றாகச் சேருமையா உம்மோடு எங்களையே
9. தேவா காரும் தேவதூதர் துணையுமிங்கே
காவலாய் நிற்கவேணும் கலக்கமில்லாமல் காரும்
10. நித்தியவீடு பரலோகத்தில் எமக்குண்டு
பக்தியுள்ளோர்க்காயேசு வைத்தாரதையே மீண்டு
11. பிதாச்சுதனாவியர்க்கும் தோத்திரம் தோத்திரமே
ஆதிமுதலே எல்லாக்காலமு முண்டாகவே
Comments
Post a Comment