05 June 2018

ஐயா கிறிஸ்தையா அருளையா மேசையா


230. இராகம் (அம்மா, மகராசி)               (173)

பல்லவி

                   ஐயா கிறிஸ்தையா அருளையா மேசையா

அனுபல்லவி

                   ஓ ஐயா சரண் ஐயா உனை அல்லால் உலகுய்யா
                        ஆ! துய்யா இது பொய்யா அருள் பெய்யா மெய்யா

1.         வான்புவி சேனைகள் வணங்கியே போற்றியே
            மாவல தேவ மைந்தாவே மாவளமாய் வரந்தாவே
            என் தேவே என்னைக்காவே யேகோவாவே கோவே         - ஐயா

2.         தினம் தினம் உம்மையே தொழுது நான் போற்றுவேன்
            எனதாசைப் பெருமானே எனக்கான உயிர்தானே
            என்தேனே உனை நனே பணிவேனே கோனே                 - ஐயா

3.         சங்கீத வாத்தியம் இங்கிதம் கேட்குதே
            சங்கைமிகும் என் நாதா சாமி ஏசு பொற்பாதா
            திருவேதா குருநாதா அருள் தாதா தாதா                    - ஐயா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...