மகராஜாவே பேரொளி வீசாயோ


231. இராகம் இங்கிலீஷ்             (174)

பல்லவி

                   மகராஜாவே பேரொளி வீசாயோ

அனுபல்லவி

                        ஜெகதீசாவே நரர் பவ நாசாவே

1.         சிந்தையில் நொந்தென் கண்களிலெங்கும்
            சிங்கனே மிகு பங்கம் பங்கம்
            நிந்தை பவங்கள் தொலைத்திடுவாயிதோ
            இங்கே எழுந்து நீ வந்திடுவாய்             -          மகராஜாவே

2.         அண்டமடங்கலும் எண்டிசையோனே
            மண்டலமதிலுள்ள மானிடர் கோனே
            பண்டு முனக்கு நான் தொண்டு செய்வேனே
            பண்டது போலினி நொண்டேனே           -          மகராஜாவே

3.         வேத வினோத சங்கீத பொற்பாதா
            வேதவியாக்கினியானருள் போதா
            வேதியனே யான் பாவியென்றோதி
            சேதமொன்றின்றி அரவணை செய்        -          மகராஜாவே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே