05 June 2018

வாவா ஜெகதீசா வரந்தரவே வாவா ஜெகதீசா


229. ஆனந்த பைரவி         ஆதி தாளம்  (172)

பல்லவி

 

                   வாவா ஜெகதீசா வரந்தரவே வாவா ஜெகதீசா

                   இது சமயம் வாவா ஜெகதீசா

                        உன் மகிமையை யார் யார் யார் அறிவார்?


1.         இரண்டு மூன்று பேர் கூடி தொண்டுபுரியும் வேளை
            அண்டையில் வருவேனென்றீரே அட்டி சொல்லாதே     - வாவா

2.         பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற
            பற்பல பாஷை பேசினார் பிரசங்கம் செய்ய                     - வாவா

3.         காவில் கனி புசித்த ஏவையின் மக்களுக்காய்
            பூவில் கன்னி பாலுண்டவா, புகல் சொல்லாதே               - வாவா

4.         மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவர்கட்கும்
            ஆசீர்வாதம் கொடுத்தவா அருள் புரிய                         - வாவா



5.         கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
            தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன               - வாவா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...