05 June 2018

ஐங்காயத்தினடைக்கலம் காவே


228. இராகம் (தேவாநீரெங்கள் அடைக்கலமே)                                   (171)

பல்லவி

                   ஐங்காயத்தினடைக்கலம் காவே
                   ஐயா கிறிஸ்தே உன்னருள் தாவே

1.         சொர்க்கத்தில் வந்துதித்த துரையரசே
            ஜோதிப் பிரகாச முடி அணி சிரசே

2.         தேவ கோபமென்னைத் தொடராமல்
            சிங்கப்பசாசுவந்து அடராமல்

3.         பாவ உழையினில் கால் பதியாமல்
            பரலோக வாஞ்சை எனில் குறையாமல்

4.         உலகமொரு புறத்தில் நெருக்காமல்
            உமது நல்லாவி என்னை வெறுக்காமல்

5.         தாசன் சற்குணன் சொல் கவி சிறக்க
            சகல நரர்களுமுன்னடி துதிக்க

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...