தேவ கிருபை ஆசீர்வாதம்
பல்லவி
தேவ
கிருபை ஆசீர்வாதம்
தினமும்
எங்களில் பெருகிட
சரணங்கள்
1. ஆவலாயும
தோய்வு நாளில்
ஆலயந்தனில்
பணிந்து புகழ
பாவ
அறிக்கை செய்யும் ஜனங்கள்
பரனின்
கிருபை பெற்று மகிழ -
தேவ
2. ஆவலாய்
எங்கள் ஆண் குழந்தைகள்
அழகான
இள மரங்கள் போலவும்
பாவையர்களாம்
பெண் குழந்தைகள்
பலத்த
சித்திர அரண்கள் போலவும் -
தேவ
3. எங்கள்
மாடுகள் பலத்திருக்கவும்
இடுக்கணுள்ளே
வராதிருக்கவும்
எங்கள்
ஆடுகள் கிராமங்களிலே
லட்சங்
கோடியாய்ப் பெருகி வரவும் -
தேவ
4. எங்கள்
பண்டகசாலை சகல
இன்ப
வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
பங்க
வலசை பகலின் கூக்குரல்
பதியில்
என்று மில்லாதிருக்கவும் -
தேவ
5. ஆலயந்தனில்
உமது வசனம்
அறிவிக்கும்
போதக ரனைவருக்குள்ளும்
வேலை
ஓய்ந்து பணியும் சபையார்
விரும்பிப்
படிக்கும் சகலருக்குள்ளும் -
தேவ
6. இத்தன்மையுடன்
இருக்கும் ஜனங்கள்
இவர்கள்
தாமென உலகம் சொல்லவும்
கர்த்தர்
தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
கண்ட
ஜனமென்றெம்மைச் சொல்லவும் - தேவ
7. உன்னதங்களின்
இருக்கும் தெய்வத்தின்
உயர்ந்த
நாமம் மகிமைப்படவும்
இந்நிலம்
சமாதானம் பெற்றிட
இஷ்டம்
மானிடர் மேலுண்டாகவும் - தேவ
8. இந்த
வீட்டுக்குச் சமாதானம்
இன்ப
சுகங்கள் அனைத்துண்டாகவும்
சந்ததியாய்
நீடூழி வாழவும்
சபையனைவரும்
துதித்திப் பாடவும் - தேவ
Comments
Post a Comment