25 June 2018

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண


1.       பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே
            பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
            சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
            துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.

2.         கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்,
            மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
            நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்
            நீக்குவாரே மனச் சோர்பை தீய குணம் மாற்றுவார்.

3.         பெலவீனமான போதும் கிருபாசன உண்டே!
            பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
            ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம்
            அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...