ஏசு ராஜன் வருவார்
336.
1. ஏசு ராஜன் வருவார் தூதரோடும் வருவார்
பக்தரை வானத்தில் சேர்த்திடவே - நான்
ஜோதியாய் அவர் முகம் கண்டிடுவேன் - பின்னும்
ஜெய கெம்பீரம் கொண்டுளம் பொங்கிடுமே - ஏசு
2. மணவாளனோடு மணவாட்டியாம் சபை
மங்களமாய் கவி சாற்றிடுமே அப்போ
மாட்சிமையோடு நாம் பாடிடுவோம் - அவர்
நேசத்தின் ஆழத்தை ருசித்திடுவோம் -
ஏசு
3. முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளை அங்கி தரித்து
கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார் - அதில்
சேர்ந்திடுவேன் நானும் பாடிடுவேன் - அன்று
பொற்கிரீடம் தரித்தாடிடுவேன் -
ஏசு
4. காதலித்தேன் நான் காசினியின் இன்பம் விட்டு
கர்த்தரோடென்று முறவாடிட - அங்கு
கனக மணவறை ஜொலித்திடுமே - அப்போ
கர்த்தரால் யேசுவில் சுகிப்போம் - ஏசு
5. வானத்தின் எக்காளம் தொனித்திடும் சமயத்தில்
சுத்தர்கள் யாவரும் பறந்திடுவார் - அப்போ
அத்தனின் கலியாண விருந்ததிலே - நாமும்
நித்தம் அவரோடார்ப்பரிப்போமே -
ஏசு
Comments
Post a Comment