மேக மீதில் ஏசு சுவாமி


337.

பல்லவி

                   மேக மீதில் ஏசு சுவாமி வேகம் வாராரே


அனுபல்லவி

                        ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ்சேர்க்க
                        அவர் வாராரே

1.         ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
            அவனியில் வாராரே
            மீண்டவரோ மேலோகமே செல்ல
            மேதினியை விடுவார்                            - மேக மீதில்

2.         கிறிஸ்துவுக்குள் மரித்தோ ரெல்லாம்
            கிளம்பியே எழும்பிடுவார்
            மரிக்காதிருக்கும் பரிசுத்த ரெல்லாம்
            மறைந்தே போவாரே                             - மேக மீதில்

3.         பாடுபட்டோருக்கு பலனளிப்பாரே
            பாடுபட்டவர் தாமே
            கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
            கூவியே கொடுத்திடுவார்                      - மேக மீதில்

4.         அவருரைத்த அடையாளங்களெல்லாம்
            தவறாமல் நடக்கின்றதே
            அவர் வரும் வேளையை எவருமறியார்
            ஆண்டவரேயறிவார்                             - மேக மீதில்

5.         ஆயிரவருஷம் ஆளுகை செய்வார்
            ஆண்டவர் ஏசு தாமே
            நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
            ஜோதியின் ஆளுகையில்                     - மேக மீதில்

6.         அல்லேலூயா கீதமே பாடி
            அகமகிழ்ந்தாடிடுவோம்
            வல்லவர் வரும் வேளையுமிதோ
            மெல்லவே நெருங்கிற்றே                       - மேக மீதில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு