எந்தன் ஆத்ம நேசர் எங்கே


338.

பல்லவி

                   எந்தன் ஆத்ம நேசர் எங்கே

அனுபல்லவி

                        அவர் எங்கே - எவர் எங்கே
                        அவர் எங்கே, எங்கே எங்கே - எந்தன்

1.         நகரத்தின் தெருவீதி சென்று
            நான் நலமுடன் தேடினேன் நின்று
            ஐயோ தேடியும் காணாமல் நின்று
            முகம் வாடி மயங்குகிறேன் நின்று          - எந்தன்

2.         காட்டு மரங்களில் தானும்
            நல்ல கிச்சிலி மரம் போல தோணும்
            நல்ல குமாரருக்குள்ளே இவர் தானும்
            குடியிருப்பது போலவே தோணும்          - எந்தன்

3.         பதினாயிரம் பேரில் சிறந்தோர்
            அதி வெண்மை சிவப்பு நிறமானோர்
            தலை பொன்மயமாய் விளங்கிடுமே
            மயிர் சுருள் சுருளாய் இருப்பவரே          - எந்தன்

4.         லீபனோன் போலவர் ரூபம்
            மிக மதுரமவர்வாயின் வசனம்
            லீலிபுஷ்பங்கள் போன்ற வருதட்டில்
            நின்று வாசனை, வெள்ளைப்போளம் விடியும்     - எந்தன்

5.         இடது கை என் தலைகீழ் வைத்து
            அவர் வலது கையா லரவணைத்து
            என்னை மனதாய் அணைத்துக்கொள்வதாலே
            நான் சோகமடையேன் நேசத்தாலே                   - எந்தன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு