08 June 2018

நேசிக்கும் பிள்ளையை நான்


284. இராகம் (உன் புரு யிருக்குதடா)                                                     (242)

செஞ்சுருட்டி                                                              ஆதி தாளம்

பல்லவி

                   நேசிக்கும் பிள்ளையை நான் நித்தம் அடித்தே வளர்ப்பேன்

அனுபல்லவி

            சாதனை செய்பவரை தண்டித்தே நான் வளர்ப்பேன்

1.         தாசியின் பிள்ளைகளைத் தண்டனை செய்வாரில்லை
            வேசியின் பிள்ளைகளை விரும்புவார் யாருமில்லை

2.         பாவத்தை நீ செய்கையிலே பட்சமுள்ள கையினாலே
            சாபத்தை நீக்குதற்கு சாடையாய் நானடிப்பேன்

3.         இப்பொழுதுந்தனக்கு இஷ்டமில்லாதிருக்கும்
            அப்புறம் தோன்றுமப்பா ஆனந்த சந்தோஷ பலன்

4.         தளர்ந்த உன் கால்களையே சரியாக வைத்துமேதான்
            நெகிழ்ந்த உன் கரங்களையே நேராக நீட்டுதற்கு

5.         சொற்பமாய் சிட்சையினால் சோர்ந்து போகாதேயப்பா
            அற்பமாய் மதியாமல் அடங்குவாய் என் புதல்வா

6.         நேருள்ள பாதையில் நிமிர்ந்து நடப்பதற்கு
            சீரற்ற பாதைகளை செவ்வையாக்கு மகனே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...