ஜீவனுள்ள மட்டும் எனது


283. சங்கராபரணம்        ஆதி தாளம்    (241)

இராகம் (ஏசுநாயகாவந்தாளிம்)

பல்லவி

                   ஜீவனுள்ள மட்டும் எனது தெய்வத்தைப் புகழ்வேன்

1.         சாவின் நரக இடுக்கம் சஞ்சலமும் தவிப்பும்
            தாவி என்னைப்பிடித்தும் சுவாமி தயவாய், சகாயம் பெற்றேன்

2.         கர்த்தாவே என் ஆத்துமாவைக் காத்தருளுமென்று
            கர்த்தர் நாமம் நோக்கிக்கூப்பிட்டேன் நான் காத்துக்கொண்டார்

3.         நமது கர்த்தர் மனதினுருக்கம் நம்மை நீதியுள்ளோர்
            அவனிதனில் கபடற்றோரைக் காத்தே ஆதரிப்பார்

4.         மெலிந்துபோன உன்னைச்சுவாமி மீட்டு ரட்சை செய்து
            நலிந்த உனக்கிளைப்பாறுதல்தந்து, தப்புவித்தார்

5.         ஜீவனுள்ளோர் தேசத்திலென் தெய்வத்தின் முன் நடப்பேன்
            தேவனையே நம்பி இதை நானே, திடமாகச் சொல்வேன்

6.         தேவன் எனக்குச் செய்த எல்லாத்திரளாம் நன்மைக்காக
            பாவியான நானவர்க்கிங்கென்ன பதிலீடு செய்வேன்

7.         மீட்பின் பாத்ரம் வாங்கிச் சுவாமி மேன்மை நாமம் சொல்லி
            ஆர்ப்பரிப்பாய் அவரின் சபைமுன் கொடுப்பேன் நேர்த்திப் பொருளை

8.         தேவசபை முன் ஜெபத்தின் வீட்டில் ஜெருசலேமின் நடுவில்
            நாவினால் நான் சொன்ன நேர்த்திக்கடனை, நானே செலுத்தி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு