அன்னே கண்ணே மின்னே


285. இராகம் (மணே ஸணே இன்னே நினதருள் புரி)                      (243)

பல்லவி

                   அன்னே கண்ணே மின்னே - எனை அறியாதிருப்பதேன்

1.         பாடுபட்டவனானல்லோ அதைப்
            பாராயொ தாகம் தீராயோ
            பார்த்தாளே கண்ணீர் வார்த்தாளெ அந்த
            மார்த்தாள் மகதலனாள் மரியாள்
            பாவி நீயும் ஓடிவா                                 - அன்னே

2.         பாவிக்கொதுக்கிடம் நானல்லோ அதை
            மேவி என்னிடம் வாராயோ
            பட்சம் தினம் தினம் லட்சம் உன்மேல்
            மிச்சமாகுது பாவியே
            தாவி நடந்தோடிவா                             - அன்னே

3.         என்னை மறந்தெங்கே போவாய்கதி
            ஏதுமிலாப் பாவியே நீ
            அன்னையும் நான் தான் துணையும் நான் தான்
            மனையும் நான் தான் மறைவிடமும்
            ஆசைகொண்டிங்கேகி வா                   - அன்னே

4.         மண்ணின் மாந்தரை நம்பாதே உன்
            மதியை மயக்கிப் போடுவாரே
            எண்ணம் என்மேல் வைக்காமல் நீ
            திண்ணம் கொண்டு திரியாதே
            மண்ணே விண்ணை நோக்கிப்பார்         - அன்னே

5.         கதியே எந்தனை நோக்கு உன்
            கதிநான் தான் என்றென வாக்க
            சுதி கூட்டிய சுரர் சுரலோக முன்
            மதியை மயக்குதே கண்ணோக்கு
            குதித்தலகையைத் தாக்கு                   - அன்னே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு