09 June 2018

ஆனந்தமே பரமானந்தமே - இயேசு

கைப்பிரதி:348

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

348.

 

                             பல்லவி

 

                   ஆனந்தமே பரமானந்தமே - இயேசு

                        அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

 

1.         இந்தப்புவி ஒரு சொந்தம் அல்ல என்று

            இயேசு என் நேசர் மொழிந்தனரே

            இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு

            இங்கேயே பங்காய் கிடைத்திடினும் - ஆனந்தமே

 

2.         கர்த்தாவே நீர் எந்தன் காருண்யகோட்டையே

            காரணமின்றி கலங்கேனேயான்

            விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட

            மேவியே சுக்கான் பிடித்திடுமே - ஆனந்தமே

 

3.         என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?

            கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது

            சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்

            ஜெயகீதம்பாடி மகிழ்ந்திடலாம் - ஆனந்தமே

 

4.         கூடார வாசிகளான நமக்கிங்கு

            வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?

            கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்

            செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ - ஆனந்தமே

 

5.         துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை

            தொண்டர் எமை அண்டி வந்திடுனும்

            சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை

            துன்பத்தினூடே அனுப்பிடுவார் - ஆனந்தமே

 

6.         இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்

            ஏழை வெகுவாய் கலங்குகிறேனே

            என் நேசர் தன் முக ஜோதியே யல்லாமல்

            இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை - ஆனந்தமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...