உன்னத வீட்டை சீக்கிரம்
349.
பல்லவி
1. உன்னத வீட்டை
சீக்கிரம் சென்று
அன்பரைச் சேர்ந்திடுவேன் ஆ ஆ
இயேசு ரட்சகர் ஏழையின் வாஞ்சை
யாவையும் தீர்த்திடுவார்
2. தூதரின் மத்தியில் மகிழ் கொண்டாடிட
தேவனைப் போற்றிடுவேன் ஆ ஆ
கமிழ் வாசனை வீசும் பூக்களின் மத்தியில்
இன்பமாய் அயர்ந்திடுவேன்
3. வானோர்கள் பல பல ஊழியம் செய்ய
ஏழையும் சேர்ந்துகொள்வேன் ஆ ஆ
என் ஏசுவின் துதியை நாவினால் பாடிட
நேசரால் அகமகிழ்வேன்
4. பளிங்கு நதியின் ஓரங்களில் நான்
ஓடி உலாவிடுவேன் ஆ ஆ
பொன் வீதியில் நானும் அன்பருடனே
கவியுடன் அடியெடுப்பேன்
5. மிதமிஞ்சி சோதனை எதிரிட்டு வந்தாலும்
ஒன்றுக்கும் அஞ்சமாட்டேன் ஆ ஆ
சிங்கம் புதரினின் றேகியே எதிர்க்கினும்
அத்தனையும் ஜெயித்திடுவேன்
6. பறவைகள் அதிகம் விருட்சங்கள் அதிகம்
நானும் அங்கே உண்டு ஆ ஆ
பாராபரன் தாமே எனக்காகச் சேர்த்த
பொருட்களும் மெத்த உண்டு
7. பேதுரு யோவான் பவுலும் கூட
அங்கே ஓய்ந்திருப்பார் ஆ ஆ
என் ஏசுவின் வீட்டில் மகாபெரும் இன்பம்
ஆ ஆ ஆனந்தம்
8. ஆறுநாள் உலகை அழகாய் படைத்து
ஏழினில் ஓய்ந்திருந்தார் ஆ ஆ
ஆறுவேன் தேறுவேன் ஆர்ப்பரிப்புடனே
அன்பரில் அகமகிழ்வேன்
Comments
Post a Comment