07 June 2018

சிங்கார ஒரேப் சார்பில்


274.                                 (232)

1.       சிங்கார ஒரேப் சார்பில் மங்கா தீச்சுவாலை இதோ
          எரியுதுபார் முட்செடிதனிலே

2.         அக்கினி மூண்டெறிந்தும் முட்செடி வேகாதென்ன
            அதிசயமே பேரதிசயமே

3.         கிட்டமுட்செடி மோசே எட்டி நடக்கையிலே
            இடிமுழக்கம் பேரிடிமுழக்கம்

4.         மோசே மோசே உனக்கு மோசம் வரும் கிட்டாதே
            முனிபர் பூமி இது மகிபர் பூமி

5.         கழற்று உன் பாதரட்சை கர்த்தாவாம் முற்பிதாக்கள்
            கவனமாய்கேள் இது கடவுளினில்

6.         உன் ஜனக்கூக்குரலும் என் முன்னே எட்டினதால்
            உனை அழைத்தேன் உயர்பதி கொடுத்தேன்

7.         ஐயா நான் திக்குவாயன் ஆகாதென்னாலே சுவாமி
            ஆளனுப்பும் வேறாளனுப்பும்

8.         ஆரோன் உன் அண்ணனல்லோ அவன் உன்னைச் சந்திப்பானே
            அவனே உன் வாய் இனி அலட்டாதே போ

9.         என்னவென்றாலும் சுவாமி என்னாலே கூடாதையா
            என் குலம் கீழ் எகிப்பத்தினிலே

10.       சுவாமி நின் நாமமென்ன ஜாதிகள் கேட்பாரென்னை
            சாற்றிடுவீர் சபை கூட்டிடுவீர்

11.       ஏகோவா என்ற நாமம் இதுமுதல் உண்டுமோசே
            எகிப்தின் நேரே ஏகி நீ சேர்

12.       அல்ல மோசே உனக்கு அடையாளம் தாரேனிப்போ
            அதோ உன்கோல் அருளடையுது பார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...