இனி நமக்கென்ன பயமேது


273. ஆனந்தபைரவி       ஆதி தாளம் (230)

பல்லவி

                   இனி நமக்கென்ன பயமேது
                   ஏசு நாதனருளிருக்கும்போது

அனுபல்லவி

            மனித வடிவாய் இந்த மானிலம் வந்த ஏசு
            அனுதினம் நமதுடனருகிலிருக்கும் போது        - இனி

1.         வழிதனில் பிறவிக்குருடன்
            வருவோரிடம் பிச்சை கேட்டு இருக்க
            ஒளி போலிலங்கும் ஏசு உன் மேலிரங்கி வந்து
            விழிகள் திறந்து மனங்களிக்கச் செய்தோனிருக்க          - இனி

2.         பெரும்பாடுகொண்ட ஒரு மாது
            ஐயன்பேணி வஸ்திரம் தொடும்போது
            ஒருவருமறியாமலுடனே உதிரம் நீங்க
            வருவார் மனமகிழ்ச்சி மகிழ்ச்சி செய்தோனிருக்க          - இனி

3.         குஷ்ட வியாதி கொண்ட ஒருவன்
            குளக்கரையில் அனுதினமிருக்க
            அஷ்டதிசை புகழும் ஆயனார் அங்கு வந்து
            கிட்டஅவனைத்தொட்டு கிருபை செய்தோனிருக்க      - இனி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு