குருநாதா நீ ஆதரி
272. பியாகு ஆதி தாளம் (229)
பல்லவி
குருநாதா
நீ ஆதரி என் குண மாதாவே
தினமுன்னவா
கைகூப்பினேன் குறி
அனுபல்லவி
குருவே
சரணம் சரணம் சரணம்
1. பாவியில் பாவி சண்டாளன் நான் பாவி
உன் பட்சம் என் ரட்சண்யமே - ஆ
உன் பாதாரவிந்தம் தராதோ நற்கதி
மணிந்தேனுன் காருண்யமே - குருநாதா
2. அறிவாலும் அறியாமலும் அகவஞ்சத் துணிவாலும்
அடியேன் செய்பவமிச்சமே - இவ்
வண்டங்கொள்ளாதென்றாலுமதை எல்லா
மகற்றுமுன் புண்ய சூட்சமே - குருநாதா
3. மேசியா தாசன் பரதேசி ரத்னன் கவி
விஸ்தாரம் உன் பெருக்கே - நீ
பேசிப்பழகி நல்லாசி ஆளிக்க
பிரயாணம் உன்னூருக்கே - குருநாதா
Comments
Post a Comment