நேசரைக் காணாமல் என்முகம்
275. இராகம் (ஆனந்தமே பேரானந்தமே)
பல்லவி
நேசரைக்
காணாமல் என்முகம் வாடுதே
நேரிழையே
நகர் பார் குழலே
1. ஆசை மன்னரைத்தேடி வாசலிலே நின்று
அங்கம் உருகினேனே ஏங்கினேனே
பாசமதால் பரவசமானேன் இப்போ
பாதகியான் நகர் கோதையரே
2. நித்திரை செய்கையில் உத்தமி என்றொரு
சத்தம் கேட்டேன் காதல்மெத்த உற்றேன்
கபாடந் திறந்தேன் கணவன் தனைக்காணேன்
கண்டதுண்டோ இங்கு நின்றதுண்டோ
3. பதினாயிரம் பேருள் என் கணவன் தனை
பகிர்ந்திடலாம் யாரும் தெரிந்திடலாம்
அதியழகன் குணமிங்கித தயாளன்
அன்பனைக் காணோமே என் பவமோ
4. சங்கை உயர் ராஜன் இங்கித நேசன்
சர்வ வல்லமை மிகுந்த ஈசன்
சத்தியவாசகன் கவி சூடிக்கொண்டாடி
சந்ததம் பரம ஆசன வாசன்
Comments
Post a Comment