02 June 2018

அன்பரே என்னுட தோழரே வாரும் ஆனந்தம் பாடிடுவோம்

கைப்பிரதி:195

To Download Txt Lyrics file

 

195. இராகம் (கர்த்தர் பிறந்தார் உத்தமர் மகிழ்வார்)                          (145)

 

1.       அன்பரே என்னுட தோழரே வாரும் ஆனந்தம் பாடிடுவோம் - நாம் நாம்

          ஆண்டவர் நமக்கு ஈந்த கிருபைக்காய் ஆனந்தம் பாடிடுவோம்

 

2.         ஆயிரத்தொளாயிரத்து எழுபத்தைந்தாமாண்டில் ஆனந்தம் பாடிடுவோம் - நாம் நாம்

            ஆபத்து நாளை அடியார் கழித்தோம் ஆனந்தம் பாடிடுவோம்

 

3.         பேயினை ஜெயித்து வாயை அடைத்தோம் ஆனந்தம் பாடிடுவோம் - நாம் நாம்

            தீயனின் சோதனை தீவினை கழித்தோம் ஆனந்தம் பாடிடுவோம்

 

4.         பஞ்சங்கள் பசிகள் நோய்களை ஜெயித்தோம் ஆனந்தம் பாடிடுவோம் - நாம் நாம்

            சஞ்சலப்படுத்தும் தீயனை மிதித்தோம் ஆனந்தம் பாடிடுவோம்

 

5.         இன்பசுகங்கள் யாவையும் கண்டோம் ஆனந்தம் பாடிடுவோம் - நாம் நாம்

            துர்சனப்பசாசின் துர்க்குணம் விட்டோம் ஆனந்தம் பாடிடுவோம்

 

6.         பிதாவுக்கும் சுதனுக்கும் தேவாவிக்கும் தோத்திரம் செய்திடுவோம் - நாம் நாம்

            ஆதி முதலான காலத்தின் படியே தோத்திரம் செய்திடுவோம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...