02 June 2018

சதா நித்ய தயைபுரி ததி இதோ


196. இராகம் (நாம் நற்சுகமாய் பெத்லேம் நகர்)                                    (146)

பல்லவி

                   சதா நித்ய தயைபுரி ததி இதோ

அனுபல்லவி

                   தாமதமோ சீமோன் என்மேல்

1.         ஆசை என்ற மூன்றுதனில் நேசமாகுதே - முழு
            மோசமான நீசனானேன் வாருமேசையா             - சதா

2.         பூவின் தன்மை போலொழியும் பாவ உலகில்- யான்
            ஜீவவழி தேட சுத்த ஆவி ஈவாய்                      - சதா

3.         மாதா பிதா உன்னையன்றி ஆதாரமில்லை - நின்
            பாதாரவிந்தமே கதி பாதுசாரையா                    - சதா

4.         சத்தியவாசனே உம்மை எத்தினம் பாடும் - மா
            சித்திரச்சீயோன் மணாளா எங்களை ஆள்வாய் - சதா

5.         கடந்த வருஷம் எமைக்கண்மணியைப்போல் - வெகு
            உடந்தையாய் தற்காத்தாயே உன்னத தேவா    - சதா

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...