வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
பல்லவி
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல
ஆண்டவர் இயேசுவண்டை
1. வாழ்நாளை
எல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே
கழிப்பது ஏன்
வந்தவர்
பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து
உன்னைச் சேர்த்துக் கொள்வார் - வரு
2. கட்டின
வீடும் நிலம் பொருளும்
கண்டிடும்
உற்றார் உறவினரும்
கூடு
விட்டு உன் ஆவி போனால்
கூட
உன்னோடு வருவதில்லை -
வரு
3. அழகும்
மாயை நிலைத்திடாதே
அதை
நம்பாதே மயக்கிடுமே
மரணம்
ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே
உன் ஆண்டவரை - வரு
4. வானத்தின்
கீழே பூமிமேலே
வானவர்
இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய
வழி இல்லையே
இரட்சகர்
இயேசு வழி அவரே -
வரு
5. தீராத
பாவம், வியாதியையும்
மாறாத
உந்தன் பெலவீனமும்
கோரக்
குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால்
நீ குணமடைய - வரு
6. சத்திய
வாக்கை நம்பியே வா
நித்திய
ஜீவன் உனக்களிப்பார்
உன்
பெயரை ஜீவ புஸ்கத்தில்
உண்மையாய்
இன்று எழுதிடுவார் - வரு
Comments
Post a Comment