28 June 2018

வா வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்


                   வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்
                        வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம்
                        வாராய் தீவிரமாய் வாசலண்டை
                        நிற்கும் நேசர் பாராய்                             - வா-வா

சரணங்கள்

1.         ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே - உன்
            கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி
            நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை
            தனில் சென்றிடாமல்                 - வா-வா

2.         ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம்
            உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம்
            பார் பார் மார்பினில் பார் பாரிலுனக்காய்த்
            தாம் பலியானார்                        - வா-வா

3.         ஓ பஞ்சைப் போல் தஞ்சம் -உன் நெஞ்சதனில் கொஞ்சம்
            ஓ பஞ்சரித்துக் கெஞ்சும் குரல் கேள் இக்கணம்
            கேள்-கேள் நேசர் குரல் வேகமாய்
            திறந்திடுவாய் வாசல்                - வா-வா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...