28 June 2018

வா வா பாவி அழைக்கிறார் இயேசு

வா வா பாவி அழைக்கிறார் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          வா வா பாவி அழைக்கிறார் இயேசு

            ஆவலாய் தம்மிடம் - ஆ ஆ ஆ

 

                             அனுபல்லவி

 

                        தேவ குமாரன் தானே

                        தேடியுனைலைந்தாரே - 2

                        தேவ கோபம் வருமுன்னே

                        ஜீவன் பெறத் தடை என்ன? - வா வா

 

                             சரணங்கள்

 

1.         தன்னிடம் வருவோர் எவரானாலும்

            தள்ள மாட்டார் இயேசு - 2

            உன்னிடம் அன்போடவர்க்கு

            உருக்கமும் உண்டு அதற்கு - 2

            உண்மையான அத்தாட்சி - (2)

            தன்னைக் கொடுத்ததே சாட்சி - வா வா

 

2.         வருந்தி நீ பாவப்பாரம் சுமப்பதைப்

            பார்க்கச் சகிக்காமல்

            வருந்தி அழைக்கிறார் இயேசு

            வந்து அவரிடம் பேசு

            திருந்தி மனங் கொண்டு வந்தால்

            அறிந்திடுவாய் அவரன்பை - வா வா

 

3.         கல்மனமோ கல்வாரியைக் கண்டும்

            கரையாதோ உன் உள்ளம்

            நில் சிலுவையண்டை சற்றே

            நீசக் கோலம் தான் உற்றே

            நீசன் உன்னையே மீட்டாரே

            பாசமாய் அழைக்கிறார் தாமே - வாவா

 

4.         ஆனந்த பாக்கியம் நீ அடைந்திடுவாய்

            அவர் பிள்ளையாகும்போது - 2

            கானம் இசைத்து நீ மகிழ்வாய்

            கர்த்தரின் நாமம் புகழ்வாய் - 2

            தானங்கள் பலவுமே பெறுவாய் - (2)

            வானவர் வரவில் இன்புறுவாய் - வா வா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...