மகனே ஓ மகளே
பல்லவி
மகனே
ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
இப்போ தாராயோ இப்போ தாராயோ
சரணங்கள்
1. கெட்ட மகனைப் போலத் துட்ட வழிகளில்
மட்டு மிஞ்சி நீ அலைந்தாய் - உன்னைக்
கட்டிப் பிடித்து முத்த மிட்டே அரவணைப்பேன்
திட்டம் இது ஓடிவா - மகனே
2. அஞ்சா மனதுடனே பஞ்சமா பாதகங்கள்
மிச்சவுமே புரிந்தாய் - உன்
நெஞ்சம் உருகுதப்பா பஞ்ச காயங்களிலே
தஞ்சம் தருவேன் வாராயோ - மகனே
3. அங்கரங்கள் துளைக்க செங்குருதி சுரக்க
தொங்கிக் குருசில் மரித்தேன் - உன்
பங்கம் அனைத்தும் போக்கித் தங்க அரண்மனையில்
சிங்காசனத்தில் அமர்த்த - மகனே
4. கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன் - நீ
செய்யும் ஜெபங்கள் கேட்டுப் பெய்வேன் ஆசீர்வாதங்கள்
நையாது காத்திடுவேன் -
மகனே
5. நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம் - பரி
சுத்த உலகமதில் அத்தன் மணவறையில்
நித்தம் சுகித்திடலாம் வா - மகனே
Comments
Post a Comment